வெளிநாட்டில் வேலை செய்து வந்த மகன் ஒரு வருடத்திற்கு பிறகு மீண்டும் வந்து தனது குடும்பத்துக்கு சர்ப்ரைஸ் கொடுத்த வீடியோ வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.
தாய், தந்தையை பிரிந்து வெளியூரிலும், வெளி நாட்டிலும் வேலை பார்க்கும் மகன்கள் ஏராளம். அந்த வகையில் ' போயிட்டு வரேன் அம்மா ' என்று தாயை பார்த்து ஒரு மகனோ, மகளோ கூறும் தருணம் சுற்றி வேடிக்கை பார்ப்பவர்களையும் கலங்க வைத்து விடும்.