இது ஆர்.எஸ்.எஸ். குண்டர்களின் திட்டமிட்ட செயல். எங்கள் பெயரை சொல்லி அடித்தார்கள். பேராசிரியர்கள் சிலரும் உடனிருந்துள்ளனர். மேலும் பல ஆச்சரியங்களை உடைக்கிறார் ஜே.என்.யூ. மாணவர் சங்கத் தலைவர் அய்ஷி கோஷ்
கடந்த இரு நாட்களாக, நாடு முழுக்க அதிர்வலைகளை உண்டாக்கியிருக்கும் சம்பவம் டெல்லி ஜவகர்லால் நேரு பல்கலை.யில் நடத்தப்பட்டிருக்கும் மாணவர்கள் மீதான வன்முறை.
முகமூடி அணிந்த மர்ம நபர்கள் நேற்று (ஞாயிற்றுக்கிழமை) நடத்திய கொடூரத் தாக்குதலில் 25க்கும் மேற்பட்ட மாணவ மாணவிகள் கடுமையாகத் தாக்கப்பட்டு எய்ம்ஸ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
இந்நிலையில், தாக்குதலுக்கு உள்ளாக்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட மாணவர் சங்கத் தலைவர் அய்ஷி கோஷ் செய்தியாளர்களைச் சந்தித்தார். இது ஆர்.எஸ்.எஸ். அமைப்பின் கிளை அமைப்பான ஏ.பி.வி.பி. யின் திட்டமிட்ட தாக்குதல் என்று அவர் தெரிவித்துள்ளார். மேலும் காவல்துறையும் இதற்கு உடன்போனது என்றும் அவர் தெரிவித்திருக்கிறார்.
செய்தியாளர் சந்திப்பில் அவர் தெரிவித்ததாவது, “ஜே.என்.யூ. சபர்மதி விடுதியில் இருந்த மாணவ, மாணவிகள் மற்றும் ஆசிரியர்கள் மீது வன்முறையாளர்கள் நடத்திய இந்த தாக்குதல் திட்டமிட்டு நடத்தப்பட்டது.