திருவான்மியூர்,
சென்னை திருவான்மியூர் மருந்தீஸ்வரர் திருக்கோயில் மகா கும்பாபிஷேகம் விழா வரும் 5ம் தேதி நடைபெறுவதையொட்டி பக்தர்களின் வசதிக்காக பல்வேறு சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது என இந்து சமய அறநிலையத்துறை இணை ஆணையர் ஹரி பிரியா தெரிவித்தார்.
சென்னை திருவான்மியூர் மருந்தீஸ்வரர் திருக்கோயில் மகா கும்பாபிஷேகம் விழா வரும் 5ம் தேதி வெகு விமர்சையாக கொண்டாடப்படுகிறது. இதற்காக 75லட்சம் ரூபாய் செலவில் கோயில் கோபுரங்கள், கோயில் சன்னதிகள், கோயில் பிராகரங்கள் ஆகியவற்றின் புணரமைப்பு பணிகள் மற்றும் பராமரிப்பு பணிகள் செய்யப்பட்டுள்ளது என தெரிவித்தார்.
இதனையொட்டி, திருக்கோயிலில் 50ஆயிரத்திற்கும் மேற்பட்ட பக்தர்கள் வருவதால் பாதுகாப்பு பணிக்காக.10 காவல் உதவி ஆய்வாளர்கள் தலைமையில் 700க்கும் மேற்பட்ட காவல் துறையினர் மற்றும் ஊர்காவல்படையினர் ஈடுபட உள்ளனர் எனவும் கூறினார்.
மேலும், பொதுமக்களுக்கு எவ்வித அசம்பாவிதங்களும் நடக்காமல் அதனை கண்காணிப்பதற்காக 61சிசிடிவி காமிராக்கள் கோயில் சுற்றியும் வைக்கப்பட்டுள்ளது.
மேலும் கோயிலில் கும்பாபிஷேகம் நடைபெறுவதால் காவல் துறை சார்பில் காலை 7மணி முதல் 11மணி வரை போக்குவரத்து மாற்றம் செய்யப்பட உள்ளது எனவும் தெரிவித்தார்.
10குற்றதடுப்பு பிரிவு அதிகாரிகள் கண்காணிப்பு பணியில் ஈடுபட உள்ளனர். கூட்ட நெரிசல் இன்றி பக்தர் கோயில் தரிசனம் மேற்கொள்ள சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார்.
தொடர்ந்து பேசியவர் பொதுமக்களின் பொது தரிசனத்திற்கு மேற்கு கோபுர ரத வாசல் வழியாகவும், சிறப்பு தரிசனத்திற்கு கிழக்கு ரத வாசல் வழியாக அனுமதிக்கப்படுவார்கள் எனவும் பொது மக்களுக்கு தீர்த்த நீர் கிடைப்பதற்காக 15இடங்களில் நீர் தெளிப்பான்கள் வைக்கப்பட்டுள்ளது .
இருசக்கர, நான்கு சக்கர வாகனங்கள் நிறுத்துவதற்கு கலாச்சேத்ரா வளாகம், ராமச்சந்திரா திருமண மண்டபம், திருக்கோயில் வணிக வளாகம். ஆனந்த் அப்பார்ட்மென்ட்ஸ்என 4இடங்களில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. 6 இடங்களில் குடிநீர் வவசதியும், கழிப்பறை வசதியும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இதனால் பொதுமக்கள் தகுந்த ஒத்துழைப்பு வழங்கி விழாவை சிறப்பித்து தருமாறு கோயில் நிர்வாகத்தினர் வேண்டுகோள் வைத்துள்ளனர்.